Wednesday, November 19, 2008

ஆறு வித்தியாசங்கள்

ஓபாமாவுக்கு உலகநாயகர்கள் அனைவரும் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளனர். தமிழ்நாட்டு முதலம்மைச்சர் கருணாநிதியும் அனுப்பி இருக்கிறார். அவருக்கும் ஓபாமாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
கடல்மடை திறந்தது போலப் பேசுவதில் இருவரும் வல்லவர்கள்.
வக்கணையாகவும் வசீகரமாகவும் பேசுவதில் இருவரும் திறமைசாலிகள்.
அவ்வளவுதான் ஒற்றுமை அங்கே நின்றுவிடுகிறது.
ஓபாமாவின் தேர்தல் வியூகமும் அதை நடைமுறைப் படுத்திய விதமும் வியத்தக்கது.
  • தான் “வந்தேறி”க் கருப்பனுக்கும் வெள்ளைமாதுக்கும் பிறந்த மகனாக இருந்தபோதிலும் தன்னைச் “சாமானியன்” என்றோ “கருப்பன்” என்றோ கூறிக்கொண்டதில்லை.
  • இனமானம் காக்க எனக்கு ஓட்டுப் போடுங்கள் என்று தன் கருப்பின மக்களைக் கேட்டுக்கொண்டதில்லை
  • சமூகநீதி காக்க வெள்ளைத்தோலர்களை ஒதுக்கியதில்லை.
  • தேர்தல் முடிவு தெரிந்ததும் அவர் ஷிகாகோவில் ஆற்றிய உரையை அமெரிக்காவில் பாராட்டதவர்களே இல்லை. “தேர்தலில் உணர்ச்சி வசப்பட்டு உரத்த குரலில் பேசி இருக்கலாம். பங்காளிச் சண்டை போட்டிருக்கலாம். ஆனால் நாம் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல. நண்பர்களே. எனக்கு ஓட்டுப்போட்டவர்களுக்கும் எனக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கும் நான் ஜனாதிபதி. ஒன்றுபட்டு நாட்டை எதிரிநோக்கி இருக்கும் பிரச்னைகளைச் சமாளிப்போம்.”
  • சென்றவாரம் தன்னுடன் போட்டிபோட்டுத் தோல்வியுற்ற ஜான் மக்கெயினைச் சந்தித்து தன் தேசத்தை எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை வெற்றிகரமாகச் சமாளிப்பதற்கு அவரின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார்.
  • தமிழ்நாட்டில்?

4 comments:

மடல்காரன்_MadalKaran said...

காலம் ஒரு நாள் மாறும் கிருஷ்ணமூர்த்தி. நாகரீகத்திற்கு அகராதி எழுதியவர்கள் நாம். ஆனால் இப்போது அதைதான் தேடிக் கொண்டிருக்கிறோம். ஒரு வெய்யில் காலம் இருந்தால் ஒரு குளிர் காலம் இருக்கும், ஒரு குளிர் காலம் இருந்தால் ஒரு வசந்த காலம் விரைவில் வரும். நம்புங்கள். நடக்கும் நல்லது நம் நாட்டிலும்.
அன்புடன், கி.பாலு.

The Unsure Ascetic said...

Sir, I liked your copmparison. Thank you.

ஈ ரா said...

ஐயா,

தங்களைப் போன்ற அனுபவஸ்தர்கள் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும்...

இட்லி வடையில் எனது எழுத்துக்கு தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி....

அன்புடன்

ஈ ரா

IBGY said...

Very Good article. My Namaskaarams to you sir!